பனிமழை ...

பனிமழை ...
--------------------------------
அதிகாலை எழுந்து 
கண்களை கசக்கிக்கொண்டு
சிலந்தி வலையில் 
துளையிட்டு செல்வது போல்
கைகளால் விலக்கியவாறு
புருவங்களை குவித்து
கூர்ந்து கவனித்தபடி 
வாசலில் பிரவேசிக்கிறேன்
பனிமழை கொஞ்சம் கொஞ்சமாக
என்னை முழுவதும்
நனைத்துவிட முயற்சிக்கிறது
தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு
முகக் கவசம் அணிந்த பின்
மெதுவாக நடந்து செல்கிறேன்
பறந்து வந்து இமைகளில் அமரும்
பனித் தூறல் மொட்டுகள்
மழலைகள் கைகளில் அள்ளித் தெளிக்கும்
தண்ணீர்த் துளிகளைப் போல்
ஆகாய வெளியில்
சிதறிக் கொண்டேயிருக்கிறது
பல ஞாபகங்கள் மனதுக்குள்ளே 
வந்து போனாலும்
பனிமழை 
என் ஈர மனதுக்குள்
சாரல் மிகுந்த குளிர் வாசனையோடு
பொழிந்துகொண்டே உள்ளது
பெரும் அடை மழையாக ...
                       - ஆம்பல் காமராஜ்.

Popular posts from this blog

சிவப்பு சிந்தனையாளன் தோழர் எஸ். ஏ. முருகையன்.