தைத் திருநாளே ...

தைத் திருநாளே ...
---------------------------------------
நேற்றைக்குதான் தெரியும்
இன்றுதான் 
நீ வருகின்றாய் என்று
பொருளாதார நெருக்கடியில்
பூமியோடு அறையப்பட்ட என்னால் 
எழுந்து கூட மகிழ்ச்சியாக
வரவேற்க முடியவில்லை
புத்தாடை உடுத்தி
பொட்டு இட்டு
உன்னை அலங்காரம் செய்ய கூட
அருகதை அற்றவனாக இருக்கிறேன்
எப்படி இருந்தாலும்
எல்லோருக்கும் வருவதைப் போல
எங்கள் வீட்டுக்கும்
நீ வந்துவிட்டுதான் போவாய்
வா தைத் திருநாள் 
பெருமகளே ...
                          - ஆம்பல் காமராஜ்.

Popular posts from this blog

சிவப்பு சிந்தனையாளன் தோழர் எஸ். ஏ. முருகையன்.