மழை வணக்கம்
மழை வணக்கம் ...
--------------------------------------------
காலை, மதியம், இரவுக்கு என்று
எனது ஊர் மழை
அதிகாலையிலயே வந்து
வணக்கங்களை
அழுத்தமாக
சொல்லிவிட்டுப் போய்விடுகிறது
ஆதலாலயே
நாள் முழுதும்
வெளிப் பயணம்
ஏதும் செல்லாமல்
வீட்டிலயே
தங்கிவிடுகிறேன்.
- ஆம்பல் காமராஜ்.