சிவப்பு சிந்தனையாளன் தோழர் எஸ். ஏ. முருகையன் -------------------------------------------------------------- ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர் தோழர் எஸ். ஏ. முருகையன். ஆம்பலாப்பட்டில் முதன் முதலாக1943-ல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை துவங்கியபோது து. கதிரேசன், காமாட்சி, வே. அ. சுப்பையன் அல்லாடி அண்ணாமலை போன்ற தலைவர்களோடு தோழர் எஸ். ஏ. எம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கக் கூடிய எஸ். ஏ. முருகையனும் ஒருவர். ஆம்பலாப்பட்டு தெற்கில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு இருந்ததை பறித்து மதுக்கூர் ஜமீன்தாரின் கையாட்களுக்கு பிரித்து கொடுத்தார்கள். இதனால் அன்றாடம் பிழைப்பு நடத்த முடியாமல் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஜமீன் இடம் கடன் வாங்கி இருந்தார்கள். அதற்கு ஒன்றுக்குப் பத்தாக நோட்டு எழுதி வாங்கி வைத்துக்கொண்டு தொழிலாளர்களை மிரட்டியதற்காகவும், ஏழைக் கூலித் தொழிலாளர்களிடம் பறித்த நிலத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்கு. "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என மதுக்கூர் ஜமீன்தாரை எதிர்த்து தனது தோழர்களோ...